கொழும்பு, செப்டம்பர் -23 – வரலாறு காணாத வகையில் இரண்டாம் வாக்கு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட இலங்கை அதிபர் தேர்தலில், இடச்சாரி வேட்பாளரான அனுரா குமார திசநாயகே வெற்றிப் பெற்றார்.
இலங்கைத் தேர்தல் ஆணையம் அனுராவின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளருக்கும் குறைந்தபட்சம் 50% வாக்குகள் கிடைக்காத காரணத்தால், அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அதில் அனுரா 42.31% வாக்குகளைப் பெற்ற வேளை, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 32.76% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையே பிடித்தார்.
நடப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் சர்வாதிகாரி மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டனர்.
56 வயது அனுரா குமார திசநாயகே இன்று திங்கட்கிழமை இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிச சிந்தாந்த வழியில் வந்த முதல் இலங்கை அதிபராக அவர் திகழ்கிறார்.