கொழும்பு, அக்டோபர்-17, இணைய நிதி மோசடி தொடர்பில் இலங்கையில் 4 மலேசியர்கள் உள்ளிட்ட 10 பேர் கைதாகியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான சிலாபத்தில் (Chilaw) உள்ள ஒரு ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் சிக்கினர்.
அங்கு சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் நடைபெறுவதாக புகார் கிடைத்ததை அடுத்து போலீஸ் சோதனைக்குச் சென்றது.
கைதான மற்றவர்களில் நால்வர் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சீன பிரஜை, மற்றொருவர் கென்யா நாட்டவர்.
20 கணினிகள், 282 கைப்பேசி கள் உள்ளிட்ட பொருட்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.