Latestஉலகம்

இலங்கையில் நாளையோடு முடிவுக்கு வருகிறது அவசரகாலச் சட்டம்

கொழும்பு, ஆகஸ்ட் 17 – இலங்கையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால நிலை நீட்டிக்கப்படாது. அந்நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தணிந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து, அவசரகால நிலையை நீட்டிக்க வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியால் உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து, அந்நாட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன. இதனையடுத்து, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச, பின்னர் ஜூலை 14ஆம் தேதி பதவி விலகலை அறிவித்தார்.

எனினும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து மோசமடைந்ததால், நிலைமையைக் கட்டுப்படுத்த அப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருந்த ரணில் விக்ரமசிங்கே, கடந்த மாதம் 18ஆம் தேதி அவரச காலச் சட்டத்தை அறிவித்தார். அச்சட்டம் நாளையோடு முடிவடையும் வேளையில் அது நீட்டிக்கப்படாது என அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!