கொழும்பு,பிப் 2 – இலங்கையில் Kelaniya பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் மாணவர்கள் விடுதிக்குள் கட்டாயமாக புகுந்த கும்பல் ஒன்று அந்த மாணர்கள் மீது தாக்குதல் நடத்தினர். விடியற்காலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 15 பேர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் கூறினர். அந்த தாக்குதலில் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
Related Articles
Check Also
Close