
கொழும்பு , அக் 3- இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் 15,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 7 ஆம்தேதிவரை இலங்கையில் தொடர்ந்து கடுமையாக மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் வெள்ள பாதிப்பு மேலும் மோசமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் எட்டு மாவட்டங்களில் நிலச்சரிவு பேரிடர்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.