கொழும்பு, பிப் 15 – இலங்கை அரசையும் ராஜபக்சே குடும்பத்தினரையும் கடுமையாக குறைகூறிவந்த அந்நாட்டின் தொலைக்காட்சி நிருபருக்கு எதிராக ஆயுதம் ஏந்திய துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். விடியற்காலை மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் Chamudtha Samara wicrama என்ற அந்த நிருபர் உயிர் தப்பினார்.
You Tube உட்பட ஊடகங்களில் இலங்கை அரசின் கொள்கைகளையும் ராஜபக்சே சகோதரர்களையும் சமரவிக்ரமா குறைகூறியும் விமர்சனமும் செய்து வந்தார். சமரவிச்ரமாவின் காரை ஒரு வேனில் பின் தொடர்ந்து சென்ற ஆயுதம் ஏந்திய மூன்று நபர்கள் அவரது வீட்டில் துப்பாக்கிக் சூடு தாக்குதலை மேற்கொண்டனர்.