Latestமலேசியா

திரங்கானுவில், கார் நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்ட கட்டண முகப்புகள் சேதப்படுத்தி, எரியூட்டப்பட்ட சம்பவம் ; குத்தகையாளர் போலீஸ் புகார்

குவாலா நெருஸ், டிசம்பர் 5 – திரங்கானு, குவாலா நெருஸ், ரிம்பா சதுக்கத்திலுள்ள, கார் நிறுத்துமிடத்தின் கட்டண வசூலிப்பு முகப்பு ஒன்று கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்ட வேளை ; மற்றொன்றுக்கு எரியூட்டப்பட்டது.

24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில், அவ்விரு கட்டண முகப்புகளும் சேதப்படுத்தப்பட்டன. சேவைக்கு திறக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது குறித்து, வருத்தம் தெரிவித்த தனியார் குத்தகை நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி நோர்ஷபினா அப்துல் பாத்தா, அது குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்.

ரிம்பா சதுக்கத்திலுள்ள, கார் நிறுத்துமிடத்திற்கு கட்டணம் விதிக்கப்படுவது, பலரை அதிருப்தியடையச் செய்துள்ளது. எனினும், குவாலா திரங்கானு நகராண்மை கழகத்துடன், ஈராண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதால், அதனை தவிர்க்க இயலாது என நோர்ஷபினா தெரிவித்தார்.

அதனால், அதிருப்தியை வெளிப்படுத்த சதிச் செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, பிரச்சனைக்கு தீர்வுக் காண சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, ரிம்பா சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டண முகப்பு ஒன்று சேதப்படுத்தப்பட்டிருப்பதையும், மற்றொன்றுக்கு எரியூட்டப்பட்டதையும் காட்டும் காணொளி ஒன்று வைரலானது.

கடந்த அக்டோபரில், அதே இடத்தில், கட்டுமானத்தில் இருந்த கட்டண முகப்பு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!