
கொழும்பு, பிப் 7 – இலங்கையின் பிரபல கோடிஸ்வரர் வர்த்தகரும் OPEX Holdings நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான 45 வயதுடைய Onesh Subasinghe இந்தோனேசியாவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ஜகார்த்தா போலீஸ் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். தமது பிரேசில் மனைவி, 4 வயது மகள் மற்றும் அவர்களின் பெண் தோழியுடன் Onesh Subasinge இந்தோனேசியாவுக்கு உல்லாச பயணம் சென்றிருந்தபோது அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் தங்கியிருந்தனர்.
இதனிடையே Subasinghe வின் மனைவி, அவரது மகள் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஆகியோர் அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக நம்பப்படுவதாக ஜகர்த்தா போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.