Latestஉலகம்

இலங்கை பொருளாதாரம் மோசமான வீழ்ச்சிக்கு சென்றுவிட்டது; பிரதமர் ரணில் ஒப்புதல்

கொழும்பு, ஜூன் 23 – இலங்கையின் பொருளாதார நெருக்கடி முழுமையாக சரிவடைந்துவிட்டது அல்லது மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் Ranil Wickremesinghe ஒப்புக்கொண்டுள்ளார். இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை வாங்கமுடியாத நிலையில் இலங்கை இருப்பதாக அவர் கூறினார். எரிவாயு, மின் விநியோகம் மற்றும் உணவு தட்டுப்பாடும் மோசமடைந்து வருகிறது.

எங்களது பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக சரிந்துவிட்டது .நிலைமையை சரிப்படுத்துவற்கான வாய்ப்பையும் தமது அரசாங்கம் தவறிவிட்டதாக நிதியமைச்சருமான Ranil கூறினார். இலங்கை பொருளாதாரம் இப்போது படு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் எச்சரித்தார். Ceylon Petroleum corporation தற்போது மோசமான கடனில் சிக்கியுள்ளதால் உலகில் எந்த நாடும் அல்லது எந்த அமைப்புகளும் எண்ணெய் வழங்குவதற்கு முன்வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!