Latestமலேசியா

இலோன் மாஸ்கிற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்தது; X தளம் பிரேசில் நாட்டில் உடனடி முடக்கம்

சாவோ பாலோ, ஆகஸ்ட் -31, X சமூக ஊடகத்தின் பயன்பாட்டுக்கு பிரேசில் நாட்டில் உடனடி முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் சட்ட விவகாரங்களுக்கான பிரதிநிதியை நியமிக்க X-க்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்ததால், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

X தளம் முடக்கப்பட்டு விட்டதை அடுத்த 24 மணி நேரங்களுக்குள் நீதிமன்றத்திடம் உறுதிப்படுத்த வேண்டுமென, அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

X தொடர்பான நீதிமன்ற ஆணைகள் அனைத்திற்கும் அந்நிறுவனம் கட்டுப்படும் வரையில் அத்தடை தொடரும்.

3.28 மில்லியன் அபராத பாக்கியைச் செலுத்துவதும் அதிலடங்கும்.

பிரேசில் உச்ச நீதிமன்றத்துக்கும் X தள உரிமையாளர் இலோன் மாஸ்க்குக்கும் (Elon Musk) இடையில் வெடித்துள்ள பிரச்னையின் புதிய அத்தியாயம் இதுவாகும்.

தணிக்கை உத்தரவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 3 வாரங்களுக்கு முன் பிரேசிலில் உள்ள தனது அலுவலகத்தை மூடியதோடு, ஊழியர்களையும் X பணியிலிருந்து நீக்கியதே இப்பிரச்னையின் தொடக்கப் புள்ளியாகும்.

ஏற்கனவே, Mask 40 விழுக்காட்டு பங்குத்தாரராக இருக்கும் துணைக்கோள இணையச் சேவை வழங்குநரானா Starlink நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளும் பிரேசிலில் முடக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!