
சிரம்பான், ஜன 16 – இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் , அதிகமான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கூறியிருக்கிறார்.
அத்திட்டத்துக்கு நாட்டில் 30 லட்சம் பெண்கள் தகுதி பெற்றிருக்கும் நிலையில் இதுவரை, 6,000 பேர் வரை மட்டுமே அத்திட்டத்தில் தன்னார்வ ரீதீயாக முன் வந்து பதிந்து கொண்டிருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.
குடும்பம் தொடர்பான விபத்துகளுக்கு இலக்காகும்போது, பெண்கள் , அந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக இழப்பீடு பெற முடியும்; அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற முடியும். ஆனால், இந்த திட்டம் தொடர்பில் இன்னும் பலர் அறியாமல் இருப்பதாக வி. சிவக்குமார் கூறினார்.