Latestமலேசியா

இல்லாத முதலீட்டில் RM348,500 பறிகொடுத்த பகாங் தம்பதியர்

பகாங், ஆகஸ்ட் 28 – போலி முதலீட்டுத் திட்ட மோசடிக்கு ஆளாகி 348,500 ரிங்கிட்டை இழந்துள்ளனர் பகாங்கைச் சேர்ந்த தம்பதியர்.

47 வயதான வேலையில்லாத ஒருவருக்கு, கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி அன்று மலாக்கா செக்யூரிட்டி (Malacca Security) வங்கி முதலீட்டுத் திட்டம் ஒன்று இருப்பதாக அழைப்பு வந்துள்ளது.

அழைப்பாளர் பாதிக்கப்பட்டவரை NEEQ விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யக் கூறியிருக்கிறார்.

பின், எப்படி முதலீடு செய்வது என்பது குறித்தும் இணையம் வழி பயிற்சியும், அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் இந்த ஆண்டு ஜூன் 18ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை, போலி முதலீட்டு முகவரால் வழங்கப்பட்ட வங்கிக் கணக்கில் 348,500 ரிங்கிட் மதிப்பிலான 10 பரிவர்த்தனைகளைச் செய்திருக்கிறார்.

இதனிடையே, இனி முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால் 101,000 ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்ற கேட்டபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அந்த ஆடவர் உணர்ந்திருக்கிறார்.

தனக்கும் மனைவிக்கும் சொந்தமான சேமிப்பை இந்தப் போலி திட்டத்தில் முதலீடு செய்துள்ளதை, நேற்று காவல் துறையில் புகார் வழங்கியபோது கூறியதாக பகாங் காவல்துறை தலைவர் டத்தோ ஸிரி யஹாயா ஓத்மான் (Seri Yahaya Othman) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!