Latestமலேசியா

இல்லாத யூடியூப் முதலீட்டு மோசடியில் RM1,902,070 இழந்த தாதி

அலோர் ஸ்டார், செப்டம்பர் 4 – யூடியூப்யில் பார்த்த முதலீட்டுத் திட்டத்தில் 20 பரிவர்த்தனைகளைச் செய்து, ஓய்வுபெற்ற தாதி ஒருவர் 1.9 மில்லியன் ரிங்கிட்டிற்கு மேல் இழந்துள்ளார்.

முதலில், ஒரு நிறுவனத்தின் பிரதிநிதிகள் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், இணைய வகுப்புகள் மூலம் இந்த முதலீட்டு திட்டத்தை விவரித்திருக்கின்றனர்.

அதன் பின்னர்தான், 100,000 ரிங்கிட் தொகையுடன், 19 பரிவர்த்தனைகளை பல்வேறு வங்கிக் கணக்குகளில் செய்து 1,902,070 ரிங்கிட் தொகையை இழந்துள்ளார் என்பதை கெடா வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் சுப்ரிடெண்டன் லோய் யூ லிக் (Superintendent Loi Yew Lik) தெரிவித்தார்.

76 வயதான இந்த தாதி, கடந்த ஜூன் மாதம் முதல், இந்த இல்லாத முதலீட்டு திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்யத் தொடங்கிய நிலையில், இறுதியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று காவல் துறையில் புகார் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அனைத்துலக முதலீட்டு நிறுவனமான கேபிட்டல் டைனமிக் (Capital Dynamic) என்ற பெயரில் செயல்படும் மோசடி முதலீட்டுத் திட்டம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!