புத்ராஜெயா, பிப் 17 – 2005-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த இளம் தலைமுறையினர் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்த சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால், நாட்டில் 17 வயதுடையவர்கள் சிகரெட்டை வாங்க முடியாது என்றாரவர். நாட்டில் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு புகையிலை முக்கிய காரணமாக இருக்கிறது.
அத்துடன் புற்று நோயால் இறப்பவர்களில் 22 விழுக்காட்டினரின் மரணத்திற்கு புகையிலையே காரணமாக உள்ளது. மேலும் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்கான செலவும் 13 கோடியே 27 லட்சமாக அதிகரித்திருப்பதாக, புற்றுநோய் தினத்தை முன்னிட்டு உரையாற்றும்போது , அமைச்சர் அதனைத் தெரிவித்தார்.