
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன 19 Alaska வில் ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு இளம் தாயையும் அவரது மகனையும் பனிக் கரடி ஒன்று கொன்றதாக வனத்துறையின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பொதுவாகவே பனிக் கரடிகள் மனிதர்களை தாக்குவது மிகவும் அபூர்வமாகும். அமெரிக்காவின் மேற்குக்கரை மாநிலமான wildest ட்டில் அந்த பனிக் கரடி மக்களை துரத்திச் சென்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமூக பள்ளிக்கு அருகே 24 வயதுபெண் Summer Myomick மற்றும் அவரது ஒரு வயது மகன் Clyde Ongtowasruk கை அந்த பனிக் கரடி தாக்கியதில் அவர்கள் மரணம் அடைந்தனர். அந்த கரடியை உள்ளூர் மக்களில் ஒருவர் சுட்டுக்கொன்றார்.