
சுங்கைப் பட்டாணி , ஜன 5 – விசாரணைக்கு அழைக்கப்பட்ட 16 வயது இளம்பெண்ணை தமது அறையில் கற்பழித்தாக கொண்டு வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மறுத்தார். டிசம்பர் 28 ஆம்தேதி மாலை மணி 6.30 மணியளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் Mohd Maliki Azmi இக்குற்றங்களை புரிந்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Roslan Hamid முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார். . அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம். அவர் மீதான குற்றச்சாட்டு பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும் மறு வாசிப்புக்கு வரும்.