Latestமலேசியா

இளவரசர்கள் வில்லியம், ஹேரியின் தாய்மாமாவிற்கு அழைப்பு கொடுக்க தவறிய மன்னர் சார்ல்ஸ் !

லண்டன், மே 6 – இன்று சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டும் விழா நடைப்பெறவுள்ள நிலையில், சிறப்பு விருந்தினர்களின் முழு பெயர் பட்டியல் ஏற்க்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அதில் இளவரசி டயானாவின் அண்ணன் மற்றும் இளவரசர்கள் வில்லியம், ஹேரியின் தாய்மாமாவான Earl Spencer-ரின் பெயர் இல்லாததே.
தனது முடிசூட்டும் விழாவிற்கு குறிப்பிட்ட அளவிலான அதாவது 2000 பிரமுகர்களையே மன்னர் அழைத்துள்ள நிலையில், அதில் Earl Spencer-ரின் பெயர் விடுபட்டுள்ளது. அதே சமயத்தில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் அரசி கெமிலியாவின் முன்னாள் கணவர் Andrew Parker Bowles அழைக்கப்பட்ட பிரமுகர்களின் பட்டியலில் இருப்பதே.
இதைக் கேள்விப்பட்ட வலைத்தளவாசிகள் முதல் மனைவியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லையாம், தற்போதைய மனைவியின் முன்னாள் கணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம், என்னங்க நியாயம் இதுவென கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!