பிரிட்டன், பிப் 16 – பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அண்ட்ரூ (Andrew) , அமெரிக்காவில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரச தீர்வு காண இணக்கம் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
17 வயதாக இருக்கும்போது மூன்று முறை இளவரசர் அண்ட்ரூ தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விர்ஜினியா ஜிப்ஃரே (Virginia Giuffre ) இளவரசர் அண்ட்ரூ மீது குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த குற்றச்சாட்டை இளவரசர் அண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், குறிப்பிட்ட பெரிய தொகையை விர்ஜினியா ஜிப்ஃரே-க்கு வழக்க அவர் முன் வந்திருப்பதாக, அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.