
புதுடில்லி, ஜன 16 – இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். திருவள்ளுவர் தினத்தில் அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மைக் கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்றும் மோடி சுட்டிக்காட்டினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.