Latestமலேசியா

இளைஞர் விளையாட்டு அமைச்சின் புதிய தலைமை செயலாளராக நகுலேந்திரன் நியமனம்

புத்ராஜெயா, பிப் 2 – டாக்டர் நகுலேந்திரன் காங்கயட்கரசு, இளைஞர் விளையாட்டு அமைச்சின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எதிர்கால தலைமுறையினரின் மேம்பாட்டில் தமக்கிருக்கும் பரந்த அனுபவத்தாலும் , தலைமைத்துவ பண்புகளாலும், தகுதியின் அடிப்படையிலும் 53 வயதான நகுலேந்திரன் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக, நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali தெரிவித்தார்.

நகுலேந்திரன், அறிவியல் தொழில்நுட்ப , புத்தாக்க அமைச்சில் மனித வளம், கொள்கை திட்டமிடல் உட்பட பல்வேறு பிரிவுகளில் பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆகக் கடைசியாக அவ்வமைச்சில் அவர் அறிவியல் திட்டமிடல் துறையில் துணை தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருந்தார்.

அதோடு, நகுலேந்திரன் நிர்வாக -அரச தந்திர அதிகாரியாக பொதுச் சேவை துறையில் 28 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!