கோலாலம்பூர், நவம்பர் 25 – தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி எனும் திவேட்டில் அதிகமான வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
இந்நிலையில், இளைஞர்கள் திவேட் துறையின் கீழ் வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எதிர்கால வேலை சந்தைக்கு ஏற்ப தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்ஷில் வலியுறுத்தினார்.
குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு இது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் முனைப்புகளில் மடானி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
அதற்குத் துணையாக, லெம்பா பந்தாய் தொகுதியில் B40 பிரிவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு திவேட் துறை குறித்து ஒரு நாள் கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டதாக லெம்பா பந்தாய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாமி பாட்ஷில் கூறினார்.
Interview
எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் தேர்வுகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு திவேட் எனப்படும் தொழில் திறன் கல்வி கைகொடுக்கும்.
அதனை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று ஒரு நாள் ஏற்பாடுச் செய்யப்பட்ட அக்கருத்தரங்கில் ஏறக்குறைய 70க்கு மேற்பட்டோர் கலந்து பயனடைந்தனர்.