
ஜோர்ஜ் டவுன், ஜன 31 – பினாங்கு மற்றும் கெடா கடல் எல்லைப் பகுதியில் கொள்களன்களை ஏற்றிச் சென்ற இழுவைக் கப்பலில் துவாரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கப்பலின் 8 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். தாய்லாந்தின் Kantang கிலிருந்து பினாங்கு துறைமுகத்திற்கு அக்கப்பல் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் ஏற்பட்டது. அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு இழுவை படகு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து பலர் தங்களது கருத்துக்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.