
சிரம்பான், மார்ச் 23 – பழுதடைந்த டிரக் ஒன்றை ஏற்றிக்கொண்டிருந்த இழுவை வாகனம் மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம் அடைந்தார். Bandar Ainsdale லுக்கு செல்லும் நுழைவு சாலைக்கு அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்
265. 9 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் தலையில் கடுமையயாக காயம் அடைந்த 33 வயதுடைய அந்த மோட்டார்சைக்கிளோட்டி இறந்ததை சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Nanda Maarof உறுதிப்படுத்தினார். கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டி இழுவை வாகனத்தில் மோதியதைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார் என அவர் கூறினார்.