
சீனா, ஏப் 22- சாதாரணமாக கீழே விழுந்தாலோ, அல்லது எதன் மேலாவது மோதினாலோ வலி உயிர் போகும் அளவுக்கு ஏற்பட்டுவிடும். அல்லது குறைந்தபட்சம் சிறு காயமாவது பட்டுவிடும்.
அதுவும் சிறுகுழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
ஆனால், டிரெக்டர் லாரி ஒன்று நிறுவன் ஒருவன் மீது வேகமாக மோதி சிறு தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டும், காயம் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளதோடு எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக நடந்து சென்றுள்ளான் இந்த குட்டிப்பையன். இச்சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
தற்பொழுது இந்த அதிர்ஷ்டசாலி சிறுவனைப் பற்றிதான் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.