
பேதமின்றி உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம் என்பதை மெய்பித்து காட்டியுள்ளனர் நாட்டின் கடற்படை வீரர்கள் சிலர்.
கடலில் விழுந்து தத்தளித்த நாய்க்குட்டி ஒன்றை தன்நலம் கருதாமல், நீரில் குதித்து காப்பாற்றிய அவர்களின் செயல், பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
திக்கு தெரியாமல் தத்தளித்த அந்த நாய்க்குட்டியை காப்பாற்ற முதலில் இரு கடற்படை வீரர்கள் கடலில் குதிக்கும் 22 வினாடி காணொளி ஒன்று டிக் டாக் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், மேலும் சிலர் கடலில் குதிக்கும் காட்சியும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
நேற்றிரவு பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளியை இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
‘இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்’ என இணைய பயனர்கள் சிலர் தங்களின் பாராட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.