Latestமலேசியா

இவ்வாண்டின் முதல் 6 மாதத்தில் 11,367 இணைய குற்றச் செயல்கள்

கோலாலம்பூர், ஆக 6 – இவ்வாண்டின் முதல் 6 மாத காலத்தில் 11,367 குற்றச் செயல்கள் அல்லது 61 விழுக்காடு இணையம் தொடர்பான குற்றச்செயல்கள்
நடந்துள்ளதாக வர்த்தக குற்றச்செயல் விசாரணைப் பிரிவின் உதவி இயக்குனர் Victor Sanjos தெரிவித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்வரை இணைய குற்றச் செயல்கள் 39 விழுக்காட்டிலிருந்து 61 விழுக்காடு உயர்ந்ந்துள்ளது. ஆறு வகையான மோசடிகள் இணைய குற்றச்செயலில் சம்பந்தப்பட்டுள்ளன. Macau மோசடி எனப்படும் வங்கி கணக்கிலிந்து பணத்தை மீட்பது, மின் வர்த்தக குற்றங்கள், இல்லாத கடன்கள், போலி முதலீட்டு திட்டங்கள், காதலிப்பதாக பெண்களை நம்ப வைத்து அவர்களிடம் பண மோசடி செய்வது மற்றும் தரவுகள் மோசடி ஆகியவையும் இவற்றில் அடங்கும். 199.8 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 4,912 மக்காவ் மோசடி சம்பவங்களும், 40.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு சம்பந்தப்பட்ட மின் வர்த்தக மோசடி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக Victor Sanjos தெரிவித்தார். 71.6 மில்லியன் ரிங்கிட் இழப்பை உட்படுத்திய 5,397 வர்த்தக குற்றச்செயல்களும் இதில் அடங்கும் என Victor Sanjos சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!