Latestமலேசியா

இவ்வாண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படலாம், பிரதமர் கோடி காட்டுகிறார்

பெர்மாத்தாங் பாவ், ஏப்ரல் 6 – அரசு ஊழியர்களின் சம்பளம் இவ்வாண்டு இறுதிக்குள் உயர்த்தப்படலாம் என பிரதமர் கோடி காட்டியுள்ளார்.

நீண்ட காலமாகவே அவர்களின் சம்பளம் மறுஆய்வு செய்யப்படவில்லை என்பதால், அந்த ஊதிய உயர்வு அவசியமே என தாம் கருதுவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவ்விஷயத்தில் அமைச்சரவையும் இணக்கம் கண்டிருக்கின்றது.

ஆக அடுத்து வரும் மாதங்களிலோ அல்லது ஆக தாமதமாக அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டிலோ அச்சம்பள உயர்வு அறிவிக்கப்படலாம் என அன்வார் கோடி காட்டினார்.

அரசாங்கச் செலவுகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு மத்தியிலும், இந்த ஊதிய உயர்வு முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அரசியல்வாதிகள் மத்தியில் ஊழலைத் துடைத்தொழித்து, மறுபக்கம் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த வழி வகைச் செய்வோம் என்றார் அவர்.

அரசு ஊழியர்களின் சம்பளம் நடப்பு வாழ்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் வகையில் இல்லை என்பதால், அதனை அரசாங்கம் விரைந்து உயர்த்த வேண்டும் என, அரசு ஊழியர்களின் தொழிற்சங்க காங்கிரஸ் Cuepacs கடந்த பிப்ரவரியில் வலியுறுத்தியிருந்தது.

இதையடுத்து, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அரசு ஊழியர்களின் சம்பளம் மறுஆய்வு செய்யப்பட்டு, 2025 வரவு செலவு அறிக்கையில் அது இடம்பெறும் என பொதுச்சேவைத் துறை JPA-வும் கோடி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!