புத்ரா ஜெயா, மே 13 – கர்ப்பிணிப் பெண்களுக்கான Tetanus – Diphteria – Pertussis (DTAP ) கலவை தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அல்லது இணக்கம் தெரிவித்துள்ளது. பெர்டுசிஸ் எனப்படும் கக்குவான் நோய்த் தொற்றிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க DTAP தடுப்பூசி முக்கியமானது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad தெரிவித்தார். இன்று நடைபெற்ற தேசிய நோய்த்தடுப்பு தின விழா மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நோய்த்தடுப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் (NIP) சேர்க்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று Dzulkefly கூறினார்.
நாங்கள் influenza தடுப்பூசியையும் NIP யில் சேர்ப்பதற்கு பரிசீலித்து வருகிறோம் . வயதானவர்கள் தொற்றுநோய் ஆபத்தில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம் என Dzulkifli தெரிவித்தார். அடுத்த ஆண்டு, 2025 பட்ஜெட் அல்லது அதற்குப் பிறகு, குறிப்பாக வயதானவர்களை NiP யில் சேர்க்க விண்ணப்பிப்போம் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே
DTAP தடுப்பூசி 27 முதல் 32 வாரங்கள் வரை உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது என Immunise4life திட்ட தொழில்நுட்பக் குழுவின் தலைவர் பேராசிரியர் Datuk Dr Zulkifli Ismail தெரிவித்தார்.