Latestமலேசியா

இவ்வாண்டு எண்ணெய் உதவித் தொகைக்காக 30 பில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் – முஸ்தபா முகமட்

கூச்சிங், ஜூன் 24 – இவ்வாண்டு எண்ணெய் உதவித் தொகைக்காக புத்ரா ஜெயா 30 பில்லியன் ரிங்கிட்டை செலவிட வேண்டியிருக்கும் என பிரதமர் துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட இது 170 விழுக்காடு அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். Brent கச்சா எண்ணெய் இன்றைய நிலையில் ஒரு பீப்பாய் 106 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 2022 ஆண்டுக்கான பட்ஜெட்டின்போது அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 40 அமெரிக்க டாலராக இருந்ததை முஸ்தபா முகமட் சுடடிக்காட்டினார். உக்ரைய்னில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளினால் எரிபொருள் பாதுகாப்பு மட்டுமின்றி அதன் கையிருப்பும் போதுமான அளவில் இருப்பதும் முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!