Latestமலேசியாவிளையாட்டு
இவ்வாண்டு சுக்மா போட்டியை கோலாலம்பூர் ஏற்று நடத்தும்
கோலாலம்பூர், பிப் 24 – இவ்வாண்டு சுக்மா எனப்படும் Sukan Malaysia விளையாட்டுப் போட்டியை ஜோகூருக்கு பதில் கோலாலம்பூர் ஏற்று நடத்தும்.
Sukma போட்டியை இவ்வாண்டு ஒத்திவைக்கும்படி ஜோகூர் கேட்டுக்கொண்டது. அதற்கு பதிலாக இப்போட்டியை கோலாலம்பூரில் நடத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்ததாக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் Ahmad Faizal Azumu தெரிவித்தார்.
ஆகக்கடைசியாக 2018 ஆம் ஆண்டு Sukma போட்டி நடத்தப்பட்டது. இவ்வாண்டு அப்போட்டி நடத்தப்படாவிட்டால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அப்போட்டி நடத்தப்படாத சூழ்நிலை உருவாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.