Latestமலேசியா

இவ்வாண்டு மீண்டும் மலர்ந்துள்ளது 35-வது பேரவைக் கதைகள் போட்டி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1-  மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப் பேரவை நடத்தும் பேரவைக் கதைகள் எனும் சிறுகதை எழுதும் போட்டி இவ்வாண்டும் புதியப் பொலிவுடன் 35-ஆவது பேரவைக் கதைகளாக மலர்ந்துள்ளது.

மலேசியாவின் இலக்கிய வளர்ச்சியில் அதிகமான தமிழ்ச் சிறுகதைகளை, அதாவது 640 சிறுகதைகளை முதல் தொகுப்பிலிருந்து 32-ஆவது தொகுப்பு வரை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்டதால் 2019-ஆம் ஆண்டு 33-ஆவது பேரவைக் கதைகள் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysian Book of Records) தடம் பதித்தது. இச்சாதனையை அங்கீகரிக்கும் வகையில், 34-ஆவது பேரவைக் கதைகள் சிறுகதை எழுதும் போட்டி அனைத்துலக அளவில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, 35-ஆவது பேரவைக் கதைகள் போட்டி இரண்டாவது முறையாக இவ்வாண்டும் அனைத்துலக அளவில் நடைபெறுகின்றது.

35-ஆவது சிறுகதை எழுதும் போட்டி மாணவர் பிரிவு, பொதுப் பிரிவு மற்றும் அனைத்துலகப் பிரிவு என்று மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. மாணவர் பிரிவிலும் பொதுப் பிரிவிலும் முதல் பத்து நிலையில் வெற்றி பெறும் சிறுகதைகளும் அனைத்துலகப் பிரிவில் சிறந்த மூன்று சிறுகதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘35-ஆவது பேரவைக் கதைகள்’ நூலாக வெளியீடுக் காணும்.

இப்போட்டிக்கான மேல் விபரங்களை பங்கேற்பாளர்கள் ‘Tamil Language Society of Universiti Malaya’ எனும் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் வழி பெற்றுக் கொள்ளலாம்.

போட்டியின் இறுதி நாளான 24.08.2021 பிறகு அனுப்பப்படும் படைப்புகள் யாவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என  தமிழ்ப் பேரவைக் கதைகளின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!