கோலாலம்பூர். பிப் 18- இவ்வாண்டு இதுவரை சுகாதார அமைச்சின் முன்னிலைப் பணியாளர்களில் சுமார் 8,940 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இவ்வாண்டு முதல் வாரத்தில் 284 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். அதுவே இவ்வாண்டின் ஆறாவது வாரத்தில் முன்னிலைப் பணியாளர்களில் 3,343 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியதாக அவர் கூறினார்.
தொற்றுக்குள்ளான 5,711 முன்னிலைப் பணியாளர்கள் வேலைக்கு வராமல் விடுமுறையில் இருந்தாகவும் டாக்டர் Noor Hisham டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.