கோலாலம்பூர், பிப் 13 – ரமலான் சந்தை உட்பட இவ்வாண்டு பொருளாதார நடவடிக்கைகள் மீது எந்தவொரு தடையும் விதிக்கப்படாது என பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதியளித்திருக்கின்றார்.
எனினும், அந்த சந்தையைத் திறப்பதற்கான SOP நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படுமென அவர் கூறினார். அதன் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர், ஹில்டன் தங்கும் விடுதியில் அரசாங்க ஏற்பாட்டிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மதிய விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை 22, 000 -யும் தாண்டியிருக்கும் நிலையில் , தங்களால் வியாபாரம் செய்ய முடியாமல் போகலாமென , ரமலான் சந்தை வியாபாரிகள் இதற்கு முன்பு தங்களது கவலையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இவ்வேளையில், தற்போது வரை ரமலான் சந்தைகளைத் திறக்க அனுமதிக்கும் நிலைப்பாட்டினையே அரசாங்கம் கொண்டிருப்பதாக, பிரதமர் கூறியிருக்கின்றார்.