மலாக்கா, மே 2 – இவ்வாண்டு சீனாவைச் சேர்ந்த ஒரு மில்லியன் சுற்றுப்பயணிகளை கவரும் இலக்கை மலாக்க மாநில அரசாங்கம் கொண்டுள்ளது. இவ்வாண்டு மலாக்காவிற்கு வருகை புரியும் ஆண்டாக இருப்பதால் மலாக்காவிற்கு வரும் சீன சுற்றுப்பயணிகளில் குறைந்தது மூன்று நாட்கள் மலாக்காவில் தங்கியிருப்பார்கள் என அம்மாநிலத்தின் சுற்றுலா, பாரம்பரியம், கலை மற்றும் கலச்சாரத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Zaidi Attan தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மலாக்காவிற்கு வருகை புரிந்த 8.63 மில்லியன் சுற்றுப்பயணிகளில் 204,808 பேர் சீன சுற்றுப்பயணிகள் என அவர் கூறினார். இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த பெரும்பாலான சுற்றுப் பயணிகள் மலாக்காவுக்கு வருகை புரிந்தனரே தவிர அவர்கள் தங்கியதில்லை. ஆனால் தற்போது மாநிலத்திலுள்ள ஹோட்டல்களில் அவர்கள் தங்குவது அதிகரித்துள்ளது. மலாக்காவிற்கு வருகை புரியும் சீன சுற்றுப்பயணிகளின் மனநிலை மாறிவிட்டதோடு அவர்களது சுற்றுலா இடங்களில் ஒன்றாக மலாக்கா இருப்பதும் இப்போது தெரிய வருவதாக Zaidi Attan தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய சீனாவின் பாரம்பரிய கப்பலான Fu Ning மலாக்காவிற்கு வருகை புரிந்துள்ளதால் அதனை வரேவேற்கும் சடங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.