கோலாலம்பூர், பிப் 21 – இந்த ஆண்டு PT3 அமல்படுத்தப்படுவது குறித்து கல்வி அமைச்சு இன்னும் முடிவு செய்யவில்லையென கல்வி அமைச்சர் Datuk Radzi Jidin கூறினார்.
PT3 தேர்வு தொடர்பில் பொருத்தமான அணுகுமுறை குறித்த கல்வி அமைச்சு இன்னும் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக பாடங்களில் மாணவர்களின் ஆளுமை மற்றும் தற்போது நடைபெற்றுவரும் 2021 கல்வி ஆண்டுகான தவணை சம்பந்தப்பட்ட அம்சங்களும் ஆய்வில் சம்பந்தப்பட்டுள்ளதாக Radzi Jidin கூறினார்.
PT3 தேர்வு குறித்து கல்வி அமைச்சு இன்றும் அதிகாரப்பூர்வ முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.