
இஸ்தான்பூல், ஏப் 20 – நேற்று சுமார் 5 நிமிடத்திற்கு, இஸ்தான்பூலில் கருப்பு மேகம் ஒன்று சூழ்ந்த நிலையில், அது அங்குள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது. சுமார் 10 கிமீ அகலத்திற்கு அந்த கருப்பு மேகம் படர்ந்திருந்த நிலையில், இரவு நேரம் போல வானம் காட்சியளித்தது.
இது எதனால் நிகழ்ந்தது என தெரியாத சூழலில், வானிலைத் துறையும் இது குறித்த எந்த ஒரு தலவலையும் இன்னமும் வெளியிடவில்லை.