டெல் அவிஃப், அக்டோபர்-20, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu) இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் அதன் போது நெத்தன்யாஹுவோ அவரின் மனைவியோ வீட்டில் இல்லை.
அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
லெபனானிலிருந்து வந்த ஒரு ட்ரோன், மத்திய இஸ்ரேலில் ஒரு கட்டடத்தை மோதிச் சேதப்படுத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் முன்னதாகக் கூறியிருந்தது.
மொத்தமாக 3 ட்ரோன்கள் வந்தன; அவற்றில் இரண்டினை வெற்றிகரமாக இடைமறித்தோம்.
இந்நிலையில் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் (Yahya Sinwar) கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார்.
அதனை இஸ்ரேலே அறிவித்திருந்தது.
இது நடந்து சில நாட்களுக்கு பிறகு லெபனானிலிருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.