Latestஉலகம்

இஸ்ரேலிய சமய பெருவிழாவில் 44 பேர் மிதியுண்டு இறந்தனர்

ஜெருசலேம், ஏப்ரல் 30 – இஸ்ரேலின் வடகிழக்கே உள்ள மேரோன் ( Meron)  மலை அடிவாரத்தில்,  பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சமய பெருவிழாவில்,  குறைந்தது 44 பேர் மிதியுண்டு இறந்திருப்பதாக ஐயுறப்படுகிறது.

சம்பவ இடத்தில், அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வரும் குழுவினர், 38 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.

சமய விழாவில் கலந்து கொண்டவர்களில் சிலர், படியில்  கால் தவறியதை அடுத்து, தொடர்ந்து பலர் விழுந்து மிதிபட்டதாக, தொடக்க விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!