கோலாலம்பூர், மே 11- இஸ்ரேல் ஆடவர் Avitan Shalom முடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைதான 10 தனிப்பட்ட நபர்கள் போலீஸ் ஜாமினில் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவர். இம்மாதம் 14 மற்றும் 15ஆம்தேதி தடுத்து வைக்கும் காலம் முடியும்போது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Rusdi Mohd Isa தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அவர் கூறினார். அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் விசாரணைக்கு தேவைப்பட்டால் நாங்கள் மீண்டும் அவர்களை அழைப்போம் என செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் Jinjang போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஹரிராயா விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது Rusdi இத்தகவலை வெளியிட்டார்.