பெய்ரூட், நவம்பர்-18 – பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா தரப்பின் செய்தி தொடர்பாளர் Mohammed Afif கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம், லெபனானியப் பாதுகாப்புப் படை என இரு தரப்புமே அதனை உறுதிபடுத்தியுள்ளன.
பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட அத்தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பில் இராணுவப் பொறுப்பில் இல்லாதவர்களை இஸ்ரேல் பெரும்பாலும் சீண்டுவதில்லை.
இந்நிலையில், Afif கொல்லப்பட்டிருப்பது, ஹிஸ்புல்லா தரப்பை அனைத்து வகையிலும் செயலிழக்கச் செய்யும் இஸ்ரேலின் திட்டத்தை காட்டுவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
செம்டம்பரில் தென் பெய்ரூட்டில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசான் நஸ்ரல்லாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் Afifi-யும் ஒருவராவார்.
அதோடு செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அடிக்கடி தகவல்களைப் பரிமாற்றி வந்தவர் ஆவார்.