Latestமலேசியா

இஹைலிங் ஓட்டுனர் சைக்கிளோட்டிகளை மோதித் தள்ளிய சம்பவம் ; குறுச்செய்தியை பார்த்துக் கொண்டே மோதியதாக போலீஸ் குற்றச்சாட்டு

புத்ராஜெயா, செப்டம்பர் 1 – இரு சைக்கிளோட்டிகளை கார் ஒன்று மோதித் தள்ளிய காணொளி வைரலாகியுள்ளதை அடுத்து, அது இஹைலிங் கார் எனவும், அவ்விபத்து ஆகஸ்ட்டு 27-ஆம் தேதி ,செப்பாங், ஜாலான் டெங்கில், கோத்தா வாரிசான் பகுதியில் நிகழந்தது என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவ்விபத்து தொடர்பில், சம்பந்தப்பட்ட இஹைலிங் ஓட்டுனரும், விபத்துக்குள்ளான சைக்கிளோட்டி ஒருவரும் போலீஸ் புகார் செய்திருப்பதை, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி OCPD சுப்ரிடெண்டன் மாட் நோர் ஐவான் முஹமட் உறுதிப்படுத்தினார்.

அவ்விருவரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளை ; மற்றொரு சைக்கிளோட்டி இன்னும் புகார் செய்யவில்லை என மாட் நோர் தெரிவித்தார்.

காலை மணி 7.15 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தின் போது, சம்பந்தப்பட்ட இஹைலிங் ஓட்டுனர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை ; இஹைலிங் செயலியில் வந்த குறுச்செய்தியை பார்த்துக் கொண்டே காரை செலுத்தியதால், அவர் சைக்கிளோட்டிகளை, பின்னாளிலிருந்து மோதித் தள்ள நேர்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனால், வாகனத்தை கட்டுப்படுத்த தவறியதோடு, விபத்தை விளைவித்ததால், அச்சம்பவம் போகுவரத்து குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!