
கோலாலம்பூர், மார்ச் 3 -இ.பி.எப் சந்தாதாரர்கள் கடந்த ஆண்டுக்கான சந்தா தொகைக்கு 4. 8 விழுக்காடு மற்றும் 5.1 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஷரியா சேமிப்பு தொகைக்கு 4 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரையில் லாப ஈவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நிமிட அறிக்கையில் மாற்றம் இல்லாவிட்டால் இ.பி.எப் சந்தாதாரர்களுக்கான லாப ஈவு இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நிரந்தர வைப்புத் தொகைக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் லாப ஈவைவிட இ.பி.எப்பின் லாப ஈவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதிச் சந்தையின் செயல்பாட்டை ஒப்பிடுகையில் ஈ.பி.எப் வழங்கும் லாப ஈவு சிறந்ததாக இருக்கும் என இ.பி.எப்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.