
கோலாலம்பூர், மார்ச் 29 – ஈக்கான் Buntal எந்த வகை மீன் என்று தெரியாத நிலையில் அதனை உட்கொள்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு மீன் பிடித்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. அனைத்து வகை Ikan Buntal லிலும் நச்சு இருப்பதாகவும் சரியான முறையில் அதனை உட்கொள்ளாவிட்டால் அதன் நச்சு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மீன்பிடித்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Adnan Hussain தெரிவித்தார்.
Ikan Buntal மீனின் ஈரல், தோல், குடல் மற்றும் முட்டைக் கரு அதிக விஷத் தன்மையைக் கொண்டதாக இருப்பதால் அவற்றை முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டும் . அதோடு அந்த மீனை சமைப்பதற்கு முன் முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் Adnan வலியுறுத்தினார். இணையம் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீன்களை வாங்குவோர் எந்த வகை மீன்களை வாங்கவேண்டும் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.