ஈப்போ, அக்டோபர்-8 – பேராக், ஈப்போவில் ஊரார் காரிலிருந்து பேட்டரியை திருட ஆடவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
அச்சம்பவத்தின் வீடியோ Imika Malaysia என்ற டிக் டோக் பக்கத்தில் பதிவேற்றம் கண்டு வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்று வருகிறது.
அதில், தலையில் ஹெல்மட் அணிந்திருக்கும் ஓர் ஆடவர், Meru Heights வீடமைப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற புரோட்டோன் ஈஸ்வரா காரை நெருங்குகிறார்.
காரின் bonet-டை திறந்து, ஏதோ ஒரு கருவியைக் கொண்டு பேட்டரியை அவர் கழற்ற முயலுகையில், எதிர்வீட்டு பால்கனியிலிருந்தவர் கவனித்து விட்டார்.
வீடியோ எடுத்துகொண்டே அவர் சத்தம் போட, அவ்வாடவர் bonet-டை மூடி விட்டு எதையோ சொல்லி மழுப்பி அங்கிருந்து நழுவினார்.
சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இன்னோர் ஆடவருடன் அவர் ஓட்டம் பிடித்தார்.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், பேட்டரி திருடுபோன தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
பேட்டரியை கூடவா விட்டு வைக்க மாட்டீர்கள் என பலர் விரக்தியில் கேட்டனர்.