ஈப்போ, டிசம்பர்-31, ஈப்போ, தாமான் ரிஷா, Hala Kledang Emas-சில் கேபிள் திருட்டில் ஈடுபட்டு வைரலான 3 ஆடவர்களைத் தேட, போலீஸ் பொதுமக்களிடன் உதவியை நாடியுள்ளது.
20-ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தை, பொது மக்கள் கைப்பேசியில் பதிவு செய்வது தெரிந்தவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
மூவரையும் போலீஸ் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், தகவல் தெரிந்த பொதுமக்களும் முன்வந்து உதவுமாறு, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் ( Abang Zainal Abidin Abang Ahmad) கேட்டுக் கொண்டார்.
முன்னதாக வைரலான 27 வினாடி வீடியோவில், 3 ஆடவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்படுகின்றனர்;
அவர்களில் தலையில் ஹெல்மட் அணிந்திருந்த ஆடவன் கேபிள் திருடுவதற்காக பாதாள சாக்கடைக்குள் இறங்குவதும் தெரிகிறது.