Latestமலேசியா

ஈப்போவில் கேளிக்கை மையத்தில் விபச்சாரம் ; 24 கள்ளக் குடியேறிகள் கைது

ஈப்போ, மே-6 – பேராக், ஈப்போவில் கேளிக்கை மையமொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 24 கள்ளக் குடியேறிகள் கைதாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈப்போ சுற்று வட்டாரத்தில் குடிநுழைவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட Ops Gegar அதிரடிச் சோதனையில் அவர்கள் வசமாக சிக்கினர்.

கைதானவர்களில் 18 பேர் தாய்லாந்துப் பெண்கள், 5 வியட்நாமியப் பெண்கள் மற்றும் ஒரு தாய்லாந்து ஆடவர் என பேராக் குடிநுழைவுத் துறையின் இயக்குனர் Meor Hezbullah Meor Abd Malik தெரிவித்தார்.

20 முதல் 50 வயது வரையிலான அவர்கள் குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில் கள்ளக் குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளை, அவர்களை வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் முதலாளிகளுக்கும் கடும் தண்டனைக் காத்திருப்பதாக Meor Hezbullah எச்சரித்தார்.

பொது மக்களும் கள்ளக் குடியேறிகள் குறித்து புகாரளித்து உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!