ஈப்போ, நவ 15 – தனது தாயாரின் உறவினரை கொலை செய்ததாக 21 வயது இளைஞன் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த வாரம் , தாமான் புத்திரி லின்டோங்கன் பின்தாங்கிலுள்ள ( Taman Puteri Lindongan Bintang ) வீடு ஒன்றில் வேலையில்லாத நபரான லீ ஹாவ் யி ( Lee Hao Yi ) என்பவன் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் சித்தி நோரா ஷரிப் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் லீயிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கும் நவம்பர் 10ஆம்தேதி காலை மணி 8.25 க்கிடையே 54 வயதுடைய லீ ஹூவோ திங் ( Lee Huey Ting) என்ற மாதுவை லீ கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அந்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மீண்டும் பிப்ரவரி 18 ஆம் தே