
ஈப்போ, மே 19 – முழுக்க முழுக்க ஈப்போ உட்பட பேராவில் முக்கிய சுற்றுலா மையங்களைக் கொண்டு நடிகர் விஜய் சேதுபதி , கதாநாயகி ருக்குமணி வசந்த் படிப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. விக்ரம் வேதா, 96 , நானும் ரவுடித்தான், சேதுபதி, பன்னையாரும் பத்மினியும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் போன்ற படங்களில் தமது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விஜய் சேதிபதியின் நடிப்பில் ஈப்போவை மையமாக கொண்டு புதிய படம் தற்போது தயாராகி வருகிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்த படிப்பிடிப்புக்கான பூஜை இன்று ஈப்போ கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்த பூஜையில் வர்த்தக பிரமுகர்களான டத்தோ அமாலுடின், டத்தோ சோங் , ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் மற்றும் ரசிகர்களும் திரளாக கலந்துகொண்டனர். ஏற்கனவே காதல் கிசு கிசு திரைப்படம் ஈப்போவில் எடுக்கப்பட்டது. மாநில சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்போடு அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு முடியும் வரை நடிகர் விஜய் சேதுபதி ஈப்போவில் தங்கியிருப்பார் என பேரா மாநில தொடர்பு ,பல்லூடக மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கான ஆலோசகர் நோவிந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.