ஈப்போ, ஆகஸ்ட் 28 – ஈப்போ, தாமான் ஸ்ரீ ரோக்காமில் (Taman Sri Rokam) உள்ள ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில், இன்று ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீட்டை வாடைக்கு எடுத்துள்ள ஆடவர் ஒருவர், வாகன நிறுத்துமிடத்தின் தரையை மறுசீரமைத்து சிமெண்ட் போட எண்ணி அந்த இடத்தை தோண்டியுள்ளார்.
அப்போதுதான் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் துணியால் சுற்றப்பட்ட குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த ஆடவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் மேலதிக தகவல்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.