Latestமலேசியா

ஈப்போவில் வீட்டில் தனியாக இருந்த 68 வயது பெண்மணி இறந்து கிடந்தார்

ஈப்போ, டிச 24 – ஈப்போ கார்டன் (Garden ) குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்த 68 வயது பெண்மணி ஒருவர் விடியற்காலையில் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

செய்தி அறிந்து அந்த வீட்டிற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் செல்வதற்கு முன் அதிகாலை மணி 1.13 அளவில் பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர அழைப்பை பெற்றதாக அத்துறையின் உதவி இயக்குனர்
Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

அந்த மாது வீட்டின் குளியல் அறையில் உள்ள நாற்காலியில் படுத்திருந்த நிலையில் காணப்பட்டார். எனினும் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

குளியல் அறையின் உட்பகுதியில் பூட்டப்பட்டிருந்ததை அங்கிருந்த மற்றொரு பெண்மணி உணர்ந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக 999 ஆபத்து அவசர எண்களுக்கு தொடர்பு கொண்டதாக Sabarodzi கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!